50 ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக விமான போக்குவரத்து

0
91

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா இடையே வர்த்த விமானங்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன.

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் அந்தோனி போக்ஸ் மற்றும் கியூபா போக்குவரத்து மந்திரி அடெல் ரோட்ரிகியுஸ் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் நிறுவனம், நாள் ஒன்றிற்கு இருநாடுகளின் 110 வழித்தடங்கள் வழியாக விமானங்களை இயக்கும். இது தற்போது உள்ளதை விட 5 மடங்கு அதிகம்.

தலைநகர் ஹவானாவுக்கு மட்டும் தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும். மற்றவை கியூபாவின் இதர நகரங்களுக்கு செயல்படும்.

LEAVE A REPLY