ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்

0
169

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி(93) காலமானார். எகிப்தியரான இவர், அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் உள்ள மருத்துவனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 6-வது பொதுச் செயலாளராக 1992 ஜனவரி 1-ம் தேதி இவர் பொறுப்பேற்றார். டிசம்பர் 31, 1996 வரை 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார்.

1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.

ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்திருந்தார். பொஸ்னியா மீதான நேட்டோவின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அவர் அமெரிக்காவின் கோபத்திற்கும் உள்ளானார்.

காலியின் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த தற்போதைய பொதுச் செயலாளர் பான்-கி-மூன், “மதிப்புமிக்க ஆட்சியாளர். உலகின் அமைதிக்காக விலைமதிப்பில்லா பங்களிப்பு ஆற்றியவர்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY