மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது iPhone 5SE

0
76

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5Se மொடலை மார்ச் 18 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளது. அப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்பிற்கு ஐபோன் 5Se (Special edition) என்று பெயரிட்டுள்ளது.

4 இன்ச் தொடுதிரை வசதியுடம் தயாரிக்கப்பட்டுள்ள இது, ஐபோன் 6 போன்று வட்ட வடிவ முனைகளை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய ஐபோன் 5 மொடலின் வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இதில் 6 மற்றும் 6s மொடல்களின் சில அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

8 MP முன்புற கமெரா 1.2 MP பின்புற கமெரா ஆகிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்ட் நிறங்களில் இது கிடைக்கும்.

இதனுடன், ஐபேட் Air3 ஆகியவையும் மார்ச் 19 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபேட் Air3- ல் புதிய அம்சங்களாக smart accessories மற்றும் புதிய keyboard, மேலும் அப்பின் பென்சிலையும் இந்த ஐபேடில் பயன்படுத்தலாம்.

0.05mm தடிமன் மற்றும் 0.1mm பரந்த அளவும் உள்ளன, மேலும் இதில், அப்பின் 9X ப்ராசசர், அதிக சேமிப்பு வசதி கொண்ட RAM, மேம்படுத்தப்பட்ட கமெரா வசதிகள் கொண்டுள்ளது.

LEAVE A REPLY