முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்சினைகளுக்கு தீரவினைப்பெற்றுக் கொடுக்க NFGG நடவடிக்கை!

0
263

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (15.02.16 , திங்கட்கிழமை) இடம்பெற்றது. NFGG யின் பிராந்தியக் காரியாலயத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பிராந்திய சபையின் செயலாளர்

MACM.ஜவாஹிர் ,மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

NFGGயினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச பாலர் கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்களின் ஓர் அங்கமாகவே மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. MACM. ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சிறப்புரை ஒன்றினை ஆற்றினார். அத்தோடு முன்பள்ளி ஆசிரியைகள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் சமூகமளித்திருந்த முன்பள்ளி ஆசிரியைகள் தங்களது பிரச்சனைகள் தொடர்பான பல கருத்துக்களையும் முன்வைத்தனர்.

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்புகள் இல்லாமை, முன்பள்ளி ஒன்றிற்கான அடிப்படைத்தகுதிகள் இதுவரை வறையறை செய்யப்பட்டிராத காரணத்தினால், புதிது புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிகளினால் ஏற்கனவே இயங்கிவருகின்ற பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள், முன்பள்ளி ஆசிரியைகள் தங்களுடைய தொழில் சார் தகைமைகளை மேம்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள், ஆசிரியைகளின் குறைந்தளவான சம்பளம், பெற்றோர்களுக்கு முன்பள்ளி தொடர்பாக வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு போன்ற விடயங்கள் குறித்து அதிகம் கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் கலந்துரையாடப்பட்ட முக்கிய பிரச்சனைகளுக்கான இடைக்காலத்தீர்வு ஒன்றினை விரைவில் செயற்படுத்தோடு அவற்றிற்கான நிரந்தரத்தீர்வினை பெற்றுக்கொடுக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் இதன் போது உறுதியளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மற்றுமொரு அம்சமாக கடந்த சில வாரங்களாக பிரதேச முன்பள்ளிகள் பலவற்றிற்கும் NFGGயின் தவிசாளர் அப்துர்ரஹ்மான் உட்பட பிராந்திய சபை உறுப்பினர்கள் பலரும் நேரில் சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்துள்ளதுடன் முன்பள்ளிகளுக்கு பல உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY