தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு: 188 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

0
93

கவுகாத்தி மற்றும் ஷில்லாங் நகரில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவடைந்தது.

கவுகாத்தி இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்த சோனாவல், அசாம் முதல்வர் தருண் கோகாய், மேகாலய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெனித் சங்மா, இந்திய ஒலிம்பிக் சங்க உயர் தலைவர்கள் மற்றும் 8 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் துவக்கம் முதலே பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சில போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அனைத்து தங்கப் பதக்கங்களையும் இந்தியா வசமாக்கியது.

போட்டிகள் இன்று நிறைவடைந்த நிலையில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 308 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. 23 விளையாட்டுகளில் மொத்தம் உள்ள 239 தங்கப் பதக்கங்களில் நான்கில் மூன்று பகுதியை இந்தியா கைப்பற்றி உள்ளது.

இலங்கை 25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், பாகிஸ்தான் 12 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

LEAVE A REPLY