சாட்சி சொல்ல வந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

0
136

பலபிட்டிய நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இருவர் மீது மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கு ஒன்று தொடர்பிலேயே குறித்த இருவரும் சாட்சியாளர்களாவர்.

மீகெட்டுவத்தே சுமித்த தேரர் மற்றும் அவரது சாரதி ஆகியோருக்கு எதிராக இன்றைய தினம் (16) குறித்த வழக்கு இடம்பெறவிருந்த நிலையிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியால் சுட்டவர் பஸ்ஸில் ஏறி தப்பிச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்தனர்.

(Thinakaran)

LEAVE A REPLY