நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்: 6.2 ரிக்டராக பதிவு

0
51

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தீவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமியின் அடியில் சுமார் 53 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

முன்னதாக, நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.

கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபகுதியை தாக்கிய நிலநடுக்கத்துக்கு சுமார் 200 பேர் பலியாகினர். 4000 கோடி டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY