செம்மண்ஓடை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

0
264

ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள செம்மண்ஓடை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் முப்பெரும் விழாக்கள் நேற்று (15) மாலை இடம்பெற்றது.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீடசையில் 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் பத்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நுழைவாயில் திறப்பு விழா, மைதான திறப்பு விழா என முப்பெரும் விழா இடம் பெற்றது.

அதிபர் எம்.எஸ்.சுபைதீன் தலைமையில் வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு பிரதம அதிதியும் பாடசாலை அதிபரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தால் பொண்னாடை போர்தி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளால் புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

(வாழைச்சேனை நிருபர்)

1 3 4 5 8 9

LEAVE A REPLY