AC Helmet: தரம் 10 மாணவன் சாதனை

0
281

நுவரெலியா ராகலை சென்லியநாட்ஸ் தமிழ் மகாவித்தியாலய மாணவன் எஸ்.தருமசீலன் குளிரூட்டபட்ட தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவர் ஆண்டு 10 ல் கல்வி கற்கும் மாணவராவார்.

முற்றிலும் சூரியகலத்தின் உதவியுடன் செயற்படும் இத்தலைக்கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்ற பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகம் சான்றிதழும், கௌரவமும் வழங்கியுள்ளது.

குறித்த மாணவன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை கல்வி அமைச்சில் சந்தித்து இத்தலைக்கவசம் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது அமைச்சரின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரனவும் கலந்தகொண்டார். இவர்களும் இம்மாணவனைப் பாராட்டினர்.

“எனது விருப்பம் அப்துல்கலாம் போன்று ஆவது. இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறு வயது முதல் சிறுசிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன்.

14ஆம் வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டு பிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இடத்தை பெற்றேன். அடுத்து எனது 15 ஆம் வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்துக்கான 2 ஆம் இடத்திற்கான சான்றிதழை பெற்றேன்.

எனது அடுத்த கண்டுபிடிப்பான நவீன பாதுகாப்பு கவசத்தை கண்டுப்பிடித்துள்ளேன். இது சூரியசக்தியில் இயங்கக்கூடியது. இந்ததலைக் கவசத்தில் இருக்கக்கூடிய சூரியசக்தி மின் உற்பத்திஆக்கி மூலம் பொருத்தபட்ட விசிறி சுழலும் போது தலைகவசம் குளிராக இருக்கும் இதனால் முடி விழுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும்.

இனிவரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக்கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய மோட்டார் வண்டி ஆகியன இருக்கும். மேற்கண்ட எனது திறமைகளை இனங்கண்டு எனது பாடசாலை அதிபர் திரு.வி. சிவராஜ் மற்றும் சக ஆசிரியர்கள் விஞ்ஞான பிரிவு ஆசிரியர் திரு.கமலஹாசன், திருமதி. ஜேமிலாஉமா மற்றும் எனது வகுப்பாசிரியர் திருமதி. விஜயகலா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

எனது எதிர்கால பிரயோசனமிக்க கண்டுப்பிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்விசார்ந்த அமைப்புகளும் பொது அமைப்புக்களும் தனியார் அமைப்புக்களும் உதவி புரியுமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருகும். இத்தருணத்தில் எனது தந்தை எஸ்.சின்னசாமி, தாய் திருமதி. ஆதிலெச்சுமி ஆகியோருக்கு மகனாக பிறந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன்”

LEAVE A REPLY