விபத்தில் பயணி உயிரிழப்பு; இருவர் படுகாயம்: ஆரையம்பதியில் சம்பவம்

0
93

மட்டக்களப்பு, ஆரையம்பதி நான்காம் கட்டைப்பகுதியில் நேற்று (15) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் சேர்ந்து மின்கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பி. தயாபரன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பி. புஸ்பராஜா (வயது 25) மற்றும் சைக்கிளில் பயணித்த ஒல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்த எம். ரஸீம் (வயது 44) படுகாயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

LEAVE A REPLY