அங்கோலாவில் மஞ்சள் காமாலை நோய் தாக்கி 51 பேர் பலி

0
169

கடந்த 2 மாதங்களில் அங்கோலா நாட்டில் மஞ்சள் காமாலை தாக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடும் தலைவலி, குமட்டல், வாந்தி, கடுமையான களைப்பு, பசியின்மை ஆகியவை மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும்.

லுவாண்டா மற்றும் பிற நகரங்களில் அகற்றப்படாத மலைமலையான குப்பைக் கூளங்களில் வாழ்ந்து வளர்ந்து, பல்கிப்பெருகிய கொசுக்களினால் மஞ்சள் காமாலை பரவியுள்ளது.

இப்போதைக்கு 240 பேர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,50,000 பேர் வாக்சைன் மூலம் நோய்த் தடுப்பு பாதுகாப்பு பெற்றுள்ளனர். ஆனால் 1.6 மில்லியன் பேர்களில் 4,50,000 பேர்கள் மட்டுமே நோய்த்தடுப்பு மருத்துவம் பெற்றுள்ளனர்.

ஏழை தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவினால் குப்பைகளை அகற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அகற்ற வேண்டிய அளவுக்கு ஊரகப்பகுதிகளில் குப்பைகள் மலைமலையாக குவிந்துள்ளன, அங்கிருந்துதான் கொசுக்கள் மூலம் நகர்களுக்கும் மஞ்சள் காமாலை காய்ச்சல் பரவி வருகிறது.

இதோடு மட்டுமல்லாமல், மலேரியா, காலரா, நீடித்த வயிற்றுப் போக்கு ஆகியவையும் அங்கு அதிகரித்துள்ளன.

துப்புரவு பணியாளர்கள் பலருக்கு சம்பள பாக்கி ஏகப்பட்டது நிலுவையில் உள்ளது, குப்பையை அகற்ற தூய்மையை பாதுகாக்க போதுமான உபகரணங்களை இறக்குமதி செய்ய அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஆகியவற்றால் அங்கோலா அல்லாடி வருகிறது.

அங்கோலா நாட்டிம் பொருளாதாரம் பெரும்பான்மையாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே 95% நம்பியுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கொடிநாட்டும் பிரதான நாடுகளின் திட்டமிட்ட விலை குறைப்பு நாடகத்தினால் 2014 முதல் கச்சா எண்ணெய் விலையில் 70% கடும் சரிவு ஏற்பட அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்நாட்டு க்வான்ஸா என்ற கரன்சியின் மதிப்பும் பெரிய அளவுக்கு அடிவாங்கியது.

எளிதில் குணப்படுத்திவிடக் கூடிய மஞ்சள் காமாலை சாவுகளுக்குப் பின்னால் அங்கோலாவின் இருண்ட அரசியல் பொருளாதார நிலைமை காரணமாக உள்ளது.

LEAVE A REPLY