அல்-கிம்மாவினால் வறிய மாணவர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு துவிச்சக்கர வண்டிகள்

0
302

02அல்-கிம்மா நிறுவனத்தினால் வறிய மாணவர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கான துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு மீறாவோடை எல்லை வீதியில் அமைந்துள்ள அல்-கிம்மா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை செல்லும் வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத் தலைவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் அல்-கிம்மாவின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(வாழைச்சேனை நிருபர்)

01 03 08 09 10 11

LEAVE A REPLY