தென்கொரிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி!

0
150

தென்கொரியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இது பற்றி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 விமானிகளும் கடுமையாக காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.

சியோல் நகரில் இருந்து 110 கி.மீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவில் உள்ள சன்சியான் கிழக்கு நகரில் இன்று காலை இந்த விபத்து நடந்தது. இந்த ஹெலிகாப்டர் பெல் யூஎச்-1எச் ஐரோகிவாய்ஸ் ரகத்தை சேர்ந்தது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY