சிரியாவில் மருத்துவமனை மீது விமான தாக்குதல்: 9 பேர் பலி

0
165

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் நடத்தப்படும் இந்த தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் எல்லைகளற்ற டாக்டர்கள் என்ற அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது இன்று விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்ய விமானம் மூலம் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை குண்டுவீச்சில் தரைமட்டமாக்கப்பட்டதாகவும், இதனால் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்களுக்கான மருத்துவ சேவை தடைபட்டிருப்பதாகவும் எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பானது சிரியாவில் மட்டும் சுமார் 150 மருத்துவமனைகளுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY