YUPPTV இணையதளத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை காணலாம்

0
162

ஆசிய கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற பெப்ரவரி 24ம் திகதி தொடங்கி மார்ச் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டியை இனி பிரபல இணையதள டிவி சேனலான யூப் டிவியின் (www.yupptv.com) டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக பார்க்க முடியும். இதற்கான டிஜிட்டல் உரிமத்தை யூப்-டிவி இணையதளம் பெற்றுள்ளது.

யூப் டிவி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆசிய டி20 கிரிக்கெட் போட்டியை யூப்-டியின் ஸ்மார்ட் டிவி, யூப்டிவி இணையதளம், லேப்டாப், ஸ்மார்ட் போன்ஸ் மற்றும் டேப்லட் போன்றவற்றிலும் காணலாம்.

இது குறித்து யூப்-டியின் தலைமை அதிகாரி உதய் ரெட்டி கூறுகையில்,

பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும் உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு என தனி மவுசு உள்ளது. இதை கருத்தில் கொண்டு யூப்-டிவி இணையதளம், ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை டிஜிட்டல் வாயிலாக நேரடியாக வழங்க உள்ளது. இதற்கான உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஆசிய கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யூப்டிவி டிஜிட்டல் மீடியா வாயிலாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

LEAVE A REPLY