டிவில்லியர்ஸ் அசத்தல் சதம்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

0
199

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப் டவுனில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் சதம் அடித்தார். அவர் 14 பவுண்டரியுடன் 112 ஓட்டங்கள் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 45 ஓவர்களில் 236 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடரை வென்ற தென்ஆப்பிரிக்கா:-

பின்னர் 237ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணிக்கு டி காக் (4), டு பிளிசிஸ் (0), ரசௌவ் (4) ஏமாற்றினர்.

இதனால் தென்ஆப்பிரிக்கா 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது.

பின்னர் அம்லா- டிவில்லியர்ஸ் ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் அரைசதத்தை கடந்தனர். அம்லா 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பெஹார்டியன்(13) ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் சதம் அடித்தார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா 44 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

டிவில்லியர்ஸ் 101 ஓட்டங்களுடனும், வீஸ் 41 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடர் ஆட்டநாயகனாகவும், டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY