கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்- ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானியுடன் சந்திப்பு

0
311

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா மௌலவி எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி)ஷைகுல் பலாஹ்வை காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடந்த 13 சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி கே.எம்.எம்.மன்சூர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),அதன் உப தலைவர் மௌலவி எம்.ஏ.எம்.மின்ஹாஜூதீன்,அதன் பிரதித் தலைவர் ஏ.எல்.ஆதம்லெப்பை உட்பட கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் மௌலவி எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) ஷைகுல் பலாஹ்வின் சுக துக்கங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் ஆயுலுக்காவும்,சரீர சுகத்திற்காவும் விஷேட துஆப் பிரார்தனை இடம்பெற்றது.

குறித்த துஆப் பிரார்தனையை மௌலவி எம்.ஏ.மசூத் அஹமத் (காஷிமி) நடத்தினார்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY