ஹப்புத்தளையில் விமான நிலையம்

0
238

ஹப்புத்தளை பகுதியில் புதிய உள்ளக விமான நிலையமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஹப்புத்தளை தொட்டுலாகல சேர்வூட் தோட்டத்தில் இந்த புதிய விமான நிலையம் நிர்மானிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.

சிறியரக விமானங்கள் தறையிறங்கும் வகையில் இந்த உள்ளக விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சிவில் போக்குவரத்து அதிகார சபையினூடாக வதிட்டமிடல் கண்காணிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எல்ல, பண்டாரவளை, நுவரெலியா, பதுளை மற்றும் தியத்தலாவ பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்வோரை இலக்கு வைத்து இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்கமைய 1.2 கிலோமீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் உடைய விமான ஓடுதளத்துடன் கூடிய விமான நிலையமே அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

-NF-

LEAVE A REPLY