காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதியை பார்வை இடுவதற்காக திடீர் ஷிப்லி பாறூக் விஜயம்

0
199

புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதி பல வருட காலமாக சீர் செய்யப்படாமல் இருந்தமையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர், எனவே காத்தான்குடி நகரசபையினால் இவ்வீதியினை சம்பூர்ணமாக செப்பனிடுவதற்காக பத்துலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளது.

இவ் வீதியின் தரத்தினையும், ஒழுங்கமைப்பையும் பரிசோதிற்பதற்காகவும், பார்வை இடுவதற்காகவும் திடீர் விஜயம் ஒன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன்று (15.02.2016)மேற்கொண்டார்.

அதன்போது அவ்வீதியின் சில பகுதிகளில் நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனையும், மழை மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று இருப்பதனையும் கண்ணுற்ற அவர், அதனை அழகிய முறையில் நீர் வடிதோட கூடிய வகையில் மேற்பரப்பு வாடிகான் அமைத்து சீர்செய்யும் படியும், தாழ்வாக இருந்த பகுதியினை மீண்டும் தார் இட்டு செப்பனிடும் படியும் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தரிடமும். அதற்குரிய அதிகாரிகளிடமும் ஆலோசனை வழங்கியதுடன் அதனை சீர்செய்து கொடுக்கும்படி பணிப்புரை விடுத்தார்.

60a636a0-19d1-40cc-bd11-e61db3115dbb 5114e61e-cc2b-493c-af9c-27dc45e8b56d 66886382-04d1-4e30-831b-c5561606f655 b5078580-ccbd-47c3-877e-922f533bd4e1

LEAVE A REPLY