(Poem) திருமண ‘வாள்’த்து

0
61

exam writeஇந்திய அணியில்
இருக்கின்ற அம்பயர் போல்
என்றும் சப்போர்ட் பண்ணி
இனிதாய் வாழ்க.

அனகொண்டா பாம்பும்
அனிமல் பிளனட்டும் போல்
எப்போதும் ஒன்றாய்
இணைந்தே வாழ்க.

தொகையை வாங்கிட்டு
தோற்கிற அணிபோல்
‘விட்டுக் கொடுத்தலால்’
வித்தியாசமாய் வாழ்க.

எழுபத்திரண்டடி கேக்கில்
இருக்கிற ரெஜிபோம் போல்
பிழைகளைச் செய்தும்
பிரபல்யமாய் வாழ்க.

பொட்டி பிஞ்சாலும்
வாய்க்கட்டை பலமாக்கும்
முன்னால் அதிபர் போல்
முயற்சியுடன் வாழ்க.

நூல் போல ஹீரோ
நூறு பேரை போடல் போல்
எதிர்ப்பை அடக்கி
இன்பமாய் வாழ்க.

சூரியன் உதித்த பின்
சுபஹு தொழும் பக்தன் போல்
எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி
எனக்குத் தெரியும் என வாழ்க

ஹைவே ரோட்டில்
காரில் செல்வது போல்
தளம்பல் இன்றி
தம்பதி வாழ்க.

(நிஷவ்ஸ்)

LEAVE A REPLY