முரணான எல்லை நிர்ணயங்கள் மீள திருத்தியமைக்கப்பட்ட பின்பே தேர்தல்: ஹசன் அலி

0
161

வடக்கு கிழக்கில் மாத்­தி­ர­மல்­லாது வடக்­குக்கு வெளி­யேயும் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களின் எல்­லைகள் பெரும்­பான்மை சமூ­கத்­தவர் வாழும் பிர­தே­சங்­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முர­ணான எல்லை நிர்­ண­யங்கள் மீள திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டதன் பின்பே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி. ஹசன் அலி கருத்து தெரி­விக்­கையில்,

‘முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் அதா­வுல்­லாஹ்வின் காலத்தில் எல்லை நிர்­ணய சபை­யொன்று நிறு­வப்­பட்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான எல்லை நிர்­ண­யங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பாதிக்கும் வகை­யி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டன.

முஸ்­லிம்கள் பிர­தி­நி­தித்­துவம் பெறக்­கூ­டிய முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­திகள் அரு­கி­லுள்ள ஏனைய வட்­டா­ரங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டன. இது திட்­ட­மிட்டே செய்­யப்­ப­ட­்டது.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் புதிய வட்­டார முறையில் நடை­பெ­ற­வுள்­ளதால் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பாக சிறு­பான்மைக் கட்­சிகள் முறை­யிட்­டதன் கார­ண­மா­கவே எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களை விசா­ரித்து எல்­லை­களில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் ஒரு கமிட்டி நிய­மிக்­கப்­பட்டு பணிகள் நடை­பெற்று வரு­கின்­றன.

தற்­போ­து­வரை ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வட்­டா­ரங்­களின் எல்­லைகள் திருத்தி அமைக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வட்­டார எல்­லைகள் அர­சியல் லாபங்­க­ளுக்­கா­க­வன்றி நியா­ய­மான முறையில் மீள திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டதன் பின்பே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே முஸ்லிம் காங்­கிரஸ் இருக்­கி­றது.

உள்ளூராட்சி மன்ற எல்லைகள் தொடர்பாக இறுதி தீர்மானங்களை மேற்கொள்ளும் கமிட்டியிலும் கட்சியின் தலைவர் அங்கம் வகிக்கிறார். எனவே சமூகம் சார்ந்த இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாகவே இருக்கிறது என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY