(Video) திடீரென மோதிக்கொண்ட வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்! மைதானத்தில் பரபரப்பு

0
363

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தொடக்க வீரரான அகமது ஷேஷாட் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

அப்போது வஹாப் ரியாஸ், ஷேஷாட்டை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே வந்தார்.

இதனால் ஷேஷாட் கோபமடைந்த நிலையில், வஹாப் ரியாஸ் அவரை தள்ளிவிட்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

பின்னர் வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பாகிஸ்தான் அணி வீரர்களான வஹாப் ரியாஸ்- ஷேஷாட் திடீரென மோதிக் கொண்டதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY