குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

0
158

முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி காலாவதியான விசாவை பயன்படுத்தி தொடர்ந்தும் இலங்கையில் இருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-AD-

LEAVE A REPLY