கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் நிதி உதவி

0
138

கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, குறிப்பிடத்தக்க சில சமூகப்பணிகளை வெளி மாவட்டங்களிலும் இந்நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது.

இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவானது பாடசாலை மாணவர்களின் கல்வி, பண்பாட்டு விடயங்களில் கவனம் செலுத்து வருவதோடு, மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் பல வகையிலும் நிதியுதவிகளை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் ஓர் அங்கமாக அன்மையில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத பேதமின்றி எல்லா இன மக்களுக்கும் தன்னாலான பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. சிப்லி பாறுக் அவர்களை சந்தித்து இப்பாடசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை மற்றும் கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் செலவீனங்கள் தொடர்பாக கலந்துரையாடியபோது தனது சொந்த நிதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கான நிதி உதவியினை வழங்குவதாக பிரதி அதிபர்கள் மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோரிடம் வாக்குறுதியளித்தார்.

அதன் பிரகாரம் மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவுக்கான முதலாம் கட்ட நிதி மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன், பிரதி அதிபர் ஜனாப். எல்.எல். சபூர் மற்றும் மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைரும் மற்றும் பிரதி அதிபருமான ஜனாப். ஏ.எம். அன்வர் ஆகியோரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. சிப்லி பாறுக் அவர்களின் சார்பாக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி, பொருளாளர் ஜனாப். கே.ஆர்.எம். றாஸி மற்றும் உறுப்பினர் ஜனாப். எம்.ஆர். றிபாஸ் ஆகியேரினால் 2016.02.15ஆந்திகதி திங்கட்கிழமை (இன்று) பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY