சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி படைகள் இரண்டாது நாளாக குண்டு மழை

0
166

சிரியாவின் வடக்கில் குர்தீஷ் படைக்குழுக்கள் ஆதிக்கமுள்ள இடங்கள் மீது, துருக்கி நேற்று தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த துருக்கி பிரதமர் அஹமட் தவுடோக்குளு, ”குர்தீஷ் போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ள சிரிய நகரங்களில் இருந்து அவர்கள் பின்வாங்க வேண்டும்” என எச்சரித்தார்.

இந்நிலையில், இரண்டாது நாளாக துருக்கி படைகள் குர்தீஷ் படைகள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

இந்த தாக்குதல் குறித்து துருக்கியின் தேசிய செய்தி நிறுவனம் கூறுகையில், “சிரியாவின் ஆலெப்போ மாகாணத்தில் உள்ள அஷாஸ் நகரில் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி பீரங்கி படைகள் தாக்குதல் நடத்தியது. குர்தீஸ் போராளிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் மக்கள் பாதுகாப்பு படை என்ற குர்தீஸ் போராளிகள் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி படைகள் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு சிரிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. துருக்கி படைகள் தாக்குதல் நடத்தி வரும் பகுதிகளில் ஏற்கனவே ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளது.

LEAVE A REPLY