அகதிகளுக்கான எல்லைக் கதவுகளை மூடாதீர்கள்

0
148

அகதிகளுக்கான எல்லையை மூட வேண்டாம் என்று யுரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுக்கு டச்சு வெளியுறவுத் துறை மந்திரி பெர்ட் கொயிண்டெர்ஸ் வலியுறுத்தி உள்ளார். ஆனால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பினை அதிக அளவில் பலப்படுத்துவது முக்கியமானது என்று அறிவுறுத்தினார்.

யுரோப்பிய யூனியன் தலைவர் பதவிக்காலம் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கு மாறும். அந்த வகையில் தற்போதைக்கு டச்சு நாடு அந்த பதவியை வகித்து வருகிறது.

இந்நிலையில் மெசிடோனியா தலைநகர் ஸ்கோப்ஜியில் செய்தியாளர்களிடம் பேசிய கொயிண்டெர்ஸ், அகதிகள் விவகாரத்தில் உரிய தீர்வு காண்பது தொடர்பாக நெதர்லாந்தானது ஆஸ்திரியா, மெசிடோனியா மற்றும் கிரீஸ் நாடுகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

இந்த விவகாரத்தில், கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் வாய்ப்பு இன்னும் உள்ளது என்ற அவர், அதிக அளவில் பாதிக்கப்படக் கூடிய அகதிகள் குழுக்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது யுரோப்பிய யூனியன் நாடுகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கொயிண்டெர்ஸ், கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதம மந்திரி அலெக்ஸ் சிப்ரஸை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY