கஞ்சாவுடன் ஆணொருவர் கைது

0
181

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோரகல்லிமடு பிரதேசத்தில் கஞ்சாவை விற்பனைக்காக தம் வசம் வைத்துக் கொண்டு உள்ள வீதியில் நடமாடிய குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை 15.02.2016 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் 5190 மில்லி கிராம் கஞ்சாவுடன் 43 வயதான ஆணொருவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY