இலங்கையை இலகுவாக வென்றது இந்தியா

0
186

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி, தோல்வியைத் தழுவியுள்ளதோடு தொடரையும் பறிகொடுத்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன.

இந்தநிலையில், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் வரிசையாக வௌியேற 18 ஓவர்களுக்கு 82 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அந்த அணி சார்பில் சேனக்க அதிக பட்சமாக 19 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதுவே 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி பெறும் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியுள்ளது.

இந்தியா சார்பாக சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர் இந்தியா 83 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அசத்தலாக ஆடிய அந்த அணி 13.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதன்படி 2-1 என, இருபதுக்கு 20 தொடர் இந்தியா வசமாகியுள்ளது.

LEAVE A REPLY