துருக்கி எல்லைப் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் இங்கிலாந்து நாட்டினர் மூன்று பேர் கைது

0
166

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் கிரீஸ் நாட்டின் வழியாக ஐரோப்பியாவிற்கு அகதிகளாக சென்று விடுகிறார்கள். அகதிகளுடன் தீவிரவாதிகளும் செல்ல வாய்ப்பு இருப்பதால் கிரீ்ஸ் போலீசார் தனது நாட்டின் எல்லைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று துருக்கி எல்லைப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை கிரீஸ் போலீசார் கைது செய்துள்ளது.

அதில் ஒருவர் ஈராக் நாட்டின் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவரிடம் நான்கு பயங்கர துப்பாக்கிகள் மற்றும் 2 லட்சம் குண்டுகள் இருந்தாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர் கிரீஸ்- துருக்கி நாடுகளுக்கு இடையிலான எவ்ரோஸ் ஆற்றின் அருகே உள்ள கிபி எல்லையில் கைது செய்யபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மற்ற இருவர்கள் எவ்ரோஸ் பகுதியில் உள்ள முக்கியமான வணிக மையப்பகுதியான அலெக்ஸானட்ராபோலிஸ் துறைமுகப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 18 துப்பாக்கிகளும், 22 எம்.எம். கொண்ட 40 ஆயிரம் குண்டுகளும், 5.5 எம்.எம். கொண்ட குண்டுகளும் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிரவாதம் மற்றும் கிரிமினல் அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் இவர்கள் மூன்று பேரையும் தீவிரவாத தடுப்பு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் 31-ந்தேதி இரண்டு பேர் ஸ்வீடனில் இருந்த துருக்கி நாட்டிற்கு கிரீஸ் வழியாக பஸ்சில் ஆயுதங்களுடன் சென்றபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY