இன்று ஜேர்மனி செல்கிறார் ஜனாதிபதி

0
152

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (15) முற்பகல் ஜேர்மனிக்கு புறப்படவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும்
17 ஆம் திகதி சான்டலர் அன்ஜலா மேர்கல் தலைமையில் ஜேர்மனியில் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னரும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி பலதரப்பினருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனிக்கான பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி அங்கிருந்து,எதிர்வரும் 19 ஆம் திகதி ஒஸ்றியாவிற்கு பயணமாகவுள்ளார்.

LEAVE A REPLY