கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அம்பாறைக்குச் சென்றது பற்றி பிரதியமைச்சா் பைசல் காசீமை தொடா்பு கொண்டபோது….

0
434

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தினை கல்முனையிலேயே தொடா்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டு மென்றால் 100 பெண்கள் தங்கி நின்று உள்ளகப் பயிற்சி வசதிகளைப் பெறக் கூடியவாறு சாதாரணமாக 1 ஸ்டாா் ஹோட்டேல் போன்ற ஒரு வசதியான இடம் ஒன்றை கல்முனை பிரதேசத்தில் பெற்றுத்தருமாறும் இதனை மாா்ச 1ஆம் திகதிக்கு முன் தங்களுக்கு கடைசி திகதி தருவதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலத்தா அத்துக் கோரலா தெரிவித்துள்தாக பிரதியமைச்சா் பைசால் காசீம் தெரிவித்தாா்.

மேற்படி கல்முனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் 19 வருடத்திற்கு முன்பு இதனை கல்முனையில் நிறுவினாா். அதற்காக மருதமுனையைச் சோ்ந்த ஜெமீல் என்பவரையும் முகாமையாளராக கொண்டு அப்போதைய கால கட்டத்தில் அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞா் யுவதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் இதனை நிறுவினாா்.

மறைந்த தலைவா் அப்போது மாவட்டக் காரியாலயங்கள் அனைத்தும் அம்பாறையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று இல்லாது பரந்த நிலையில் சில காரியாலயங்களை முஸ்லீம் பிரதேசங்களில் நிறுவினாா். அம்பாறையில் இருந்து சிங்கள மக்களும் இப்பிரதேசத்திற்கு வந்து தமது அலுவல்கள் செய்ய வேண்டும். அதுவும் அம்பாறை கரையோர மாவட்டத்தின் தென்கிழக்கு அலகின் முக வெற்றிலை என்ற எண்னத்தோடு சில அலுவலகங்களை கரையோர பிரதேசத்தில் நிறுவினாா்.

அதில் நிந்தவூரில் உள்ள தொழிிற்பயிற்சி மாவட்டக் காரியாலயம், இக் காரியலாயமே தெஹியத்தக் கண்டி, தொட்டு பொத்துவில் மருதமுனை வரையிலான தொழிற்பயிற்சி அலுவல்களைக் கொண்டது. வீதி அபிவிருத்தி உப அலுவலகம், நைட்டா, ஒழுவில் துறைமுகம், விவசாய விஸ்தரிப்பு , உப காரியாலயங்கள், நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை உப காரயாலயங்கள், போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதன் பிறகு முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரபினால் கரையோர பிராந்திய சுகாதாரப் பணிமனை, தேசிய வீடமைப்பு கல்முனைக் காரியாலயம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலயம் போன்றவற்றினை சுனாமியின்போது கல்முனையில் திறந்து வைத்தாா்.,

அந்த வகையில் மறைந்த தலைவரினால் 19 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டதொரு நிலையம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையமாகும்.

பிரதியமைச்சா் பைசால் காசீம் இவ் விடயம் சம்பந்தமாக தகவல் தருகையில்,

ஏற்கனவே இந்த அரசின் ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இருந்தே கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு இட நெறுக்கடியாகவும் கூடுதல் வாடகை செலுத்தப்பட்டாலும் அங்கு உள்ள ஊழியா்கள், நாளாந்தம் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்குரிய போதிய இடவசதி அங்கு காணப்படுவதில்லை. அதற்காக சிறந்த ஒரு இடத்தினை பெற்றுத்தருமாறு அமைச்சா் அத்துக்கோரலா கோரிக்கை விடுத்திருந்தாா்.

அங்கு மத்திய கிழக்கு, சைப்பிரஸ், சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் மூவினங்களையும் சாா்ந்த 100 பெண்கள் 2 வாரமாவது தங்கி நின்று பயிற்சி பெற்றுக் கொள்ளவேண்டும். தங்குமிடம், பயிற்சி அறைகள், வகுப்பறைகள், மொழிப்பயிற்சி, இலக்ரோணிக் இயந்திரங்கள் பயிற்சி, மற்றும் அவா்கள் சாதாரண இயற்கையாக தங்கி ஓய்வு பெறக் கூடிய கார்டன் வசதி உள்ள ஒர் இடத்தைப் பெற்றுத்தாருங்கள் என கூறினாா். 100 பேர் தங்கங் கூடியவாறென்றால் ஒரு ஹோட்டேல் தரத்திலான பயிற்சி நிலையத்ததையே அவா் வேண்டுகின்றாா்.

அன்மையில் பாராளுமன்றத்தில் கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சம்பந்தமாக அமைச்சா் தலத்தா அத்துக்கோரலவுடன் தலைவா் ஹக்கீம், மற்றும் பிரதியமைச்சா் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோரும் சந்தித்து இடமொன்றை பெற்றுத் தரும் வரை அம்பாறை கொண்டு செல்வதை நிறுத்துங்கள் என சொல்லியிருந்தோம். அதன் பின்னா் அமைச்சரவையில் கூட்டத்தில் சென்ற சமயத்தில் கூட நானும் தலைவா் ஹக்கீம் தலத்தாவுடன் கலந்துரையாடினோம். இவ்விடயமாக அந்த பயிற்சி நிலையத்தினை அங்கு நிலவும் இடப் பற்றாக்குறை பற்றி பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி உள்ளதாகவும் அமைச்சா தலாத்தா அத்துக்கோரல தெரிவித்தாா்.

அதன் பின் ஒரு சந்தா்பத்தில் பிரதமா் ரணில் விக்கிரம சிங்க தலைவா் ரவுப் ஹக்கீமிடமும் இப் பயிற்சி நிலையத்திற்கு உரிய போதிய இடவசதிகளை கொண்ட இடமொன்றை பெற்றுக் கொடுக்குமாறு கூறியிருந்தாா்.

இதுவரை 100 பேர் தங்கி பயிற்சி நிலையம், தங்குமிடம், வகுப்ரைகள் ஓய்வு பூங்காவனம் போன்ற வசதிகளை கொண்ட நிலையம் கல்முனையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமைச்சா் அத்துக் கோரல கேட்டுதற் கிணங்க மாா்ச் 1முதலாம் திகதி கடைசி தினமாகும். ஆனால் கல்முனை தொட்டு பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் மிகவும் இட நெறுக்கடியாக மக்கள் வாழ்கின்றனா். ஒரு மாவட்டக் காரியாலயம் பெறும் போது அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், அவா்களது கட்டட வரைபுகள், வாகன தரிப்பிடம், ஒய்வரைகள், பயிற்சி பட்டரைகள் நடாத்தக் கூடிய வசதிகள் போன்ற அலுவலங்களை எமது பிரதேசத்தில் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

அஷ்ரப் ஏ சமத்

LEAVE A REPLY