மேற்கிந்திய தீவுகளின் மிரட்டலில் 145 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்தியா

0
214

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 145 ஓட்டங்களுக்கு சுருண்டது. 19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷிம்ரோன் ஹெட்மியூர் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கத்திலே இந்திய அணி திணற ஆரம்பித்தது. தொடக்க வீரர் ரிசப் பன்ட் 1 ஓட்டங்களிலும், அன்மோல்பிரீத் சிங் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, அணித்தலைவர் இஷான் கிஷன் 4 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து வந்த சென்னை வீரர் வாஷிங்டன் சுந்தர் (7), அர்மான் ஜாபர் (5), மகிபால் லொம்ரோர் (19), மயாங்க் டாகர் (8) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய சர்பிராஸ் கான் மட்டும் அரைசதம் அடித்தார். அவர் 89 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அவெஸ் கான் (1), ராகுல் பாதம் (21) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இந்தியா 45.1 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், அல்ஜானி ஜோசப், ரியான் ஜான் தலா 3, கீமோ பால் 2, ஹொல்டர், ஸ்பிரிஞ்சர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

LEAVE A REPLY