சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்தில் 27 பேர் காயம்

0
157

பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் வெளிவாரி ஆங்கில பாடப் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் பயணித்த பஸ் ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்று (14) காலை 7.10 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 25 மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் கொள்கலன் ஓட்டுனரும் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்த மாணவிகளில் இருவரின் நிலை சற்று கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.

குறித்த இரண்டு மாணவிகளையும் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள், பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY