டிரை ஃப்ரூட்ஸ் புலாவ் (dry fruits pulao)

0
322

முந்திரி, பாதாம் மற்றும் வால்நட்ஸ் எல்லாம் கலந்தது – 50 கிராம்
பாசுமதி அரிசி – 1 ஆழாக்கு
குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
திராட்சை – 20,
நெய் – தேவைக்கு
பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் – தலா 2
பிரிஞ்சி இலை – 1
மிளகு – 4
உப்பு – சுவைக்கு

செய்முறை :-

* அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.

* குக்கரில் நெய் விட்டு நட்ஸை போட்டு வதக்கவும். பாதி வறுபட்டதும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் மிளகு சேர்க்கவும்.

* அரிசியை சேர்த்து வறுத்து இத்துடன் திராட்சையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி 1 1/2 ஆழாக்கு சூடான தண்ணீர் சேர்த்து பாலில் ஊற வைத்த குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

* மிதமான தீயில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து திறக்கவும்.

* 1 டீஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி விருப்பப்பட்டால் வறுத்த நட்ஸ் தூவி சூடாகப் பரிமாறவும்.

* நட்ஸ் கரகரப்பாக இருப்பதற்கு முதலில் சேர்ப்பதற்கு பதில் வறுத்து எடுத்த பின் பரிமாறும் போது சேர்த்துக் கிளறியும் சேர்க்கலாம். கமகம வாசனையுடன் இருக்கும் இந்த புலாவ்!

LEAVE A REPLY