நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவு தொடர்ந்து இயங்கும்

0
138

பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களை இனங்காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட, நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவை நீக்குவதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசாங்கத்தின் முக்கிய உயர் மட்டக் கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பிரிவை நீக்கினால், தற்பொழுது முன்னெடுத்து வரும் சகல விசாரணைகளையும் இடைநிறுத்த வேண்டிவரும் என்பதனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் எவ்வாறான அழுத்தங்களும் சவால்கள் வந்தாலும், அந்தப் பிரிவு தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யோசித்த ராஜபக்ஷவை கைது செய்தது முதல், இந்தப் பிரிவை நீக்க வேண்டுமென்ற கருத்து எதிர்க் கட்சிக்குள்ளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY