வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

0
173

துறைநீலாவணை 7ம் வட்டாரப் பகுதியில் வாழ்வின் எழுச்சி (சமூர்த்தி) உத்தியோகத்தர் கடமையில் இருந்தபோது தாக்கியதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது காயமடைந்த வாழ்வின் எழுச்சி (சமூர்த்தி) உத்தியோகத்தர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துறைநீலாவணை தெற்கில் சமுர்த்தி உத்தியோத்தராக கடமையாற்றும் ரி. வினாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தனது கடமைப் பிரிவில் வாழும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பான தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்தக் கிராமத்தில் வசிக்கும் சமூர்த்திப் பயனாளிக் குடும்பத்தினரே சமூர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

தமக்கான சமூர்த்தி கொடுப்பனவு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் எதிரொலியாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY