(Article) ஹுசைனின் இலங்கை விஜயம்: ஏன் முஸ்லிம் மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை

0
417

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைனின் இலங்கை விஜயம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை கைக்கு எட்டியும் வாய்க்கெட்டாத கனியைப் போன்று மாறிவிட்டதா என்ற சந்தேகம் பலர் மனதிலும் காணப்படுகிறது.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் நாளாந்தம் இலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயமானது பல்வேறு கேள்விகளுக்கு விடை காணப்படும் என்ற நிலைமை பலரிடையே இருந்து வந்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் இவருடைய வருகையை மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறலுக்கு ஐ.நா ஆணையாளரினால் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவ்வாறே, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.

ஆனால், தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை இனவாதிகள் இவருடைய வருகையை கழுகுகண் பார்வை செலுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களையும், போர் வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே ஐ.நா ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்தார் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், இலங்கை அரசாங்கம் ஐ.நா ஆணையாளரின் விஜயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததுடன் நான்கு நாள் விஜயத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்யப்பட வேண்டுமென்ற தேவை இல்லை என்று கூறியதும் நல்லாட்சி மௌனமாக இருந்தமைக்கு கிடைத்த வெற்றியாக நோக்கப்படுகிறது.

இலங்கையில் வட,கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா ஆணையாளர் அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களையும், அரசியல் தலைவர்களையும், சிவில் சமூகத்தினரையும் சந்திக்க தவறவில்லை. அவ்வாறே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனையும் ஹுசைன் சந்தித்தார்.

ஆணையாளரின் இலங்கை விஜயம் உணர்த்துவது என்ன என்பதை நாம் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் எமது நாட்டில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலை மற்றும் இனங்களிடையே நிலவும் நல்லிணக்கம் தொடர்ந்து நிலவி வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பலர் உயிரிழந்ததுடன் பலர் அங்கவீனமாகி நடைப்பிணமாக மாறியுள்ளதுடன் உடமைகள், சொத்துக்கள் என்பனவும் அழிவுற்றன. இந்த நிலையில் வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் இதே நிலை ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் நிலவி வந்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தாலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பல்வேறு அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா ஆணையாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிவில் சமூகத்தினரை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்த போதும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரவில்லை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் எந்தவொரு நபருக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. ஆனால், இதனை அறியாத இந்த மக்கள் பிரதிநிதிகள் அவருடைய விஜயத்தை அரசியல் இலாபம் தேட முனைவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

சிவில் சமூகத்தினரையும், வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ள அவர் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை சந்திக்க ஏன் நேரம் ஒதுக்கமாட்டார் என்பதே இங்குள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.

முஸ்லிம்கள் தொடர்பில் இவர்களுக்கு அக்கரை இருந்திருந்தால் நிச்சயமாக அவருடைய வருகைக்கு முன்னரே தங்களையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருப்பார்கள். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மட்டக்களப்பு பிராந்திய செயலாளர் திருகோணமலை சென்று ஐ.நா ஆணையாளரை சந்திக்க முடியுமாக இருந்தால் ஏன் இவர்களுக்கு முடியாது? இவ்விதம் செய்யாமல் கொழும்பில் உள்ள ஐநா காரியாலயத்துக்கு முன் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது வடக்கு முஸ்லிம் மக்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 09.02.2016 அன்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது உண்மையில் வட கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை ஆணையாளருக்கு எத்தி வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்படவில்லை மாறாக உள்ளுர் ஊடகங்கள் வாயிலாக இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கம் போதே ஐ.நா காரியாலயத்திலிருத்து வந்த ஹுசைனின் பிரதிநிதி ஒருவர் இவர்களது மகஜர்களை பெற்றுக்கொண்டார். உண்மையில் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹுசைனை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினை தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தி அதன் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வந்திருப்பார்கள் என்றால் இவர்கள் ஹுசைன் ஐ.நா காரியாலயத்தை விட்டு வெளியேரிய பிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று இருக்க வேண்டும்.

மாறாக அவர்கள் சில ஊடகவியளார்கள் ஐ.நா காரியாளயத்திலிருத்து வெளியே வருவதைக்கண்டு சுலோகங்களை ஏந்தியவாறு தக்பீர்களை முளங்கினார்கள். இக்காட்ச்சியை ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்த பிறகு இந்த போலி சமூகப்பற்றுள்ள ஆர்ப்பாட்டாளர்கள் வந்த வழியே சென்றுவிட்டனர். இவ் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களோ, பாராளமன்ற அல்லது மாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் எவருமே கொழுப்பில் உள்ள ஐ.நா காரியலயம், அல்லது வெளிவிவகார அமைச்சின் ஊடாக ஹுசைனை சந்திப்பதற்கான நேர ஒதுக்ககீட்டினை பெற்றத் தருமாறு எழுந்து மூலமாகவே தொலைபேசி வாயிவாகவே கோரவில்லை என்பதே உண்மை.

ஹுசைனின் நாட்டை விட்டு வெளியேரியதன் பின் இணையத்தளம்,சமூக வலைத்தளம் மூலம் முன்வைக்கப்ட்ட குற்றசட்சாட்டுகளும் இவ்வாறே ஹுசைனின் விஜயத்தின் போது வட கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைத்துள்ளது.

இக்குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானதாகும். ஹுசைன் யாழ் நல்லுர் கோவிலுக்கு சென்ற போது அக்கோவில் வளாகத்துக்க அருகில் பதாதைகளை ஏந்தியவாறு நின்று கொன்று இருந்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களில் துணிச்சல் மிக்க சிலர் பாதையில் வைத்து ஹுசைனை சந்தித்து தங்களது பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தி மகஜர்களையும் கையளித்தனர்.

அது போன்றே வளர்ந்துவரும் சிவில் அமைப்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர், வட கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள், மீள்குடியேற்றத்தில் காட்டப்படும் பாரபட்சம். இரானுவத்தினரின் பிடிலிருந்து விடுக்கப்படவேண்டிய காணிகள்.

1980ல் இனப்பிரச்சினை ஆரம்பமானதிலிருந்தே வடகிழக்கு முஸ்லிம்கள் கடுமையான பாதிப்புகக்குள்ளாகி இருப்பதால் ஐ.நா மனி உரிமை பேவையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் விசாரணைகளில் இக்காலப் பகுதியையும் உள்ளடக்க வேன்டும் என வலியுறுத்தப்பட்டது அத்தோடு வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தடுக்கும் சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் காட்டும் தாமதம்,கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகள் போன்றவை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு எழுத்து மூலமான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அவ்வாறான நிலையில் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும். கொழுப்பில் உள்ள ஐ.நா காரியாலயத்திற்கு முன் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினரல் சுமார் 100 கி.மீற்றருக்கு அப்பாலிருந்து அப்பாவி மக்களை பஸ்களில் அழைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.

இந்த அமைப்பினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர்கள் பலரும் இணைத்து ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினார்கள். இவர்கள் உண்மையில் ஹுசைனை சத்திக்க வந்திருப்பார்கள் என்றால் இக்காரியாளயத்தின் இரண்டு பிரதான வாயில்களையும் முற்றுகை இட்டு இருக்க வேண்டும். அனால் அவர்களது நோக்கம் அதுவல்ல.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை மூலம் இச்செய்தி மக்களை சென்றடைய வேண்டும் என்பதாகும். தங்களை மக்கள் பிரதிநிதிகளாக ஆக்கிய மக்களுக்கு அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு காணப்பட்டது. ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் ஹுசைனை சந்தித்து தங்கள் மக்களின் அவல நிலையை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்கள்.

அதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரகாலத்துடன் அவரை சத்திப்பத்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது. ஆனால் எங்கள் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கோ, ஆர்பாட்டங்களை முன்னெடுத்த வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினறோ ,ஜம்மியத்துல் உலமா சபையோ, தேசிய சுறா சபையோ, முஸ்லிம் மீடியா போரமோ பொய்க்கு சமூகத்தை எமாற்றிக்கொண்டு இருக்கும் சுய நல சிவில் அமைப்புக்கு ஹுசைனை சந்திப்பதற்கான தேவைப்பாடு காணப்பட்டு இருப்பின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு இருப்பார்கள்.

உண்மையில் சமூகப்பற்றுள்ள சிவில் அமைப்புப்பொன்றுதான் ஹுசைனை சந்தித்தனர். சமூக உணர்வு மிக்க மக்கள் என்றால் யாழில் ஹுசைனை சந்தித்த முஸ்லிம்களே.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக வேண்டி வட,கிழக்கிலுள்ள பல தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். அவர்கள் ஒரு குறிக்கோளுடன் செயற்படுகின்றார்கள்.

அது போன்று மலையக மக்களின் விடியலுக்காக சில மலையக தமிழ் தலைவர்கள் தங்கது கட்சி பேதங்களை மறந்து சமூக நலனுக்காக ஒன்றுபட்டு ஐக்கிய முற்போக்கு முண்னனியை உருவாக்கி அதன் கீழ் செயற்படுகின்றார்கள். இவர்களிடம் இருக்கும் குறிக்கோள்,ஒன்றுமை, சமூக உணர்வு என்பன ஏன் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்படுவதில்லை முதலில் எமது தலைமைகள் ஒன்றுபட வேண்டும்.

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வழுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த நிஹ்மத்களை நினைத்துப் பாருங்கள, நிங்கள் பகைவர்களாய் இருத்தீர்கள், உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அன்பினால் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். அல் குர்ஆன் 3.103

சிலர் உண்மைத்தன்மை அறியாது வாய்க்கு வந்த படி, தாம் நினைத்த படி ஆக்கங்களை எழுதுவதினாலே. அறிக்கைகள் விடுவதனாலோ அல்லது குறை கூறி திரிவதினாலோ எதையும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியாது.

இவ்வாறு செயற்படுவதனால் மற்றைய சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினவாதம், குரோதத் தன்மை தான் ஏற்படுமே தவிர ஒற்றுமை. சமத்துவம் நல்லிணக்கம் போன்றவை ஒரு போதும் ஏற்படாது. ஏனைய சமூகத்தின் மத்தில் முஸ்லிம் சமூகம் குழப்பவாதிகாளாக, இனவாதிகளாக, மதவாதிகளாக சிந்தரிக்கப்படுவார்கள். எனவே நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு வழி சேர்க்க கூடிய விடயங்களில் பங்களிப்பு செய்யுங்கள்.

இவ்வாறு எழுதுபவர்களுக்கு அறிக்கை விடுபவர்களும் பக்கச்சார் பின்றி உண்மைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஏன்னென்றால் நாம் ஒவ்வெருவரும் பொறுப்புதாரிகள் நாளை கியாமத் நாளில் எமது பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.

அமீன் எம் றிலான்

LEAVE A REPLY