கல்குடா முஸ்லிம்களின் காணி விடயத்தில் கரிசனை காட்டும் சிப்லி பாரூக்

0
149

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மருதன் கேணி, குஞ்சான் கேணி குளம், ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்கும் கிரான் பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட கல்லிச்சை , வடமுனை ஊத்துச் சேனை, புனானை மேற்கு போன்ற பிரதேசங்களில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்து வந்த கல்குடா முஸ்லிம்கள் அக்கால பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமகவும், இன வன்செயல்கள் காரணமகவும் தங்களுடைய இடங்களிலிருந்து முற்றாக விரட்டப்பட்ட நிலையில் மீழ் குடியேற்றம் செய்யப்படாமல் தற்பொழுது முஸ்லிம்கள் செரிந்து வாழக்கூடிய கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நல்லாட்சியில் நீதித்துறையானது, சுயாதீனமாக இயங்குகின்ற படியினால் குறித்த மக்களுடைய காணிகளை உரிமையாளர்களிடம் சட்டரீதியான முறையில் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தான் முன்னெடுத்துவரும் வீதிக்கு ஒரு நாள் என்ற செயற்திட்டத்தின் மூலம் மக்களினுடைய குறைகளை நேரடியாக கண்டறியும் விதத்தில் குறித்த பிரதேசங்களில் காணிகளை இழந்து மீழ் குடியேற்றப்படாமல் தற்பொழுது கல்குடா செம்மண்னோடை, மற்றும் மாஞ்சோலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற யுத்தத்தினாலும் வன்செயல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்பினை ஏற்படுத்தி அவர்களுடைய குறைகளை கண்டறியும் நிகழ்வினை 12.02.2016 வெள்ளிக்கிழமை செம்மண்னோடை, மாஞ்சோலை போன்ற பிரதேசங்களில் மேற்கொண்டார்.

வை.எல்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் காத்தன்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன், முன்னாள் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.அப்துர் கபூர், மற்றும் பாதிகப்பட்ட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டதனை அவதானிக்ககூடியதாக இருந்தது.

அஹமட் இர்ஸாட்

வீடியோ கல்குடா காணி சம்பந்தமான கலந்துரையாடலின் காணொளி

LEAVE A REPLY