குவைத் சென்று வெறும் கையுடன் திரும்பிய 104 பேர்

0
240

வீட்டுப் பணிப்பெண் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்காக குவைத் நாட்டுக்கு சென்று துயரங்களை அனுபவித்த 104 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 8 பேர் ஆண்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வீசா காலம் முடிந்து குவைத்தில் தங்கியிருந்தமை, வழங்குவதாக கூறப்பட்ட வேலை வழங்கப்படாமை, பல்வேறு உடல் ரீதியான சித்திரவதைகள் உட்பட பல பிரச்சினைகளை இந்த இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருந்ததாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY