இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

0
200

இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பசுபிக் கடலின் ‘ரிங் ஒப் பயர்’ என்று அழைக்ககூடிய டெக்டானிக் அடுக்குள் மோதிக்கொள்ளும் இடத்தில் இந்தோனேஷியா அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலைவெடிப்புகள் போன்ற சம்பவங்கள் நிகழ்வது வழமையான ஒன்றாக காணப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 6.9 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பனடா கடல்பகுதியில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY