பரபரப்பான ஆட்டத்தில் 1 விக்கெட்டால் இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா

0
67

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் ’திரில்’ வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் ஜாசன் ராய் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹால்ஸ் (50) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.

இதைத் தொடர்ந்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 100 ஓட்டங்களிலே இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கடைசி நேரத்தில் வோக்ஸ் (33), ரஷிட் (39) ஓரளவு ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 47.5 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது.

தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு அம்லா (0) சொதப்பினார்.

அடுத்து வந்த டி காக் (27), டுபிளசி (34), டிவில்லியர்ஸ் (36), டுமினி (31), பெகர்டியன் (38), டேவிட் வைஸ் (21) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்ததால் தென்ஆப்பிரிக்கா நெருக்கடியில் சிக்கியது.

கடைசி நேரத்தில் கிறிஸ் மொரிஸ் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் என 62 ஓட்டங்களை குவித்தார்.

இதனால் தெனஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 266 ஓட்டங்கள் பெற்று 1 விக்கெட்டால் ’திரில்’ வெற்றி பெற்றது.

இந்த மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-2 என சமன் செய்துள்ளது. கிறிஸ் மொரிஸ் ஆட்டநாயகனான தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY