சிறையிலிருந்து போதைப்பொருள் விற்கும் வெலே சுதா

0
134

போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைதாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமந்த குமார என அழைக்கப்படும் வெலே சுதா, சிறையிலிருந்தவாறு போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து நேற்று (12) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் தெரிவித்த இரகசிய பொலிஸார், அவர் உள்ளிட்ட 7 பேர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தவாறு கையடக்க தொலைபேசி வழியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில், களுத்தறை சிறைச்சாலையிலுள்ள சுரங்க சம்பத்திடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்கான அனுதியைக் கோரியபோதே, அவர்கள் இதனை நீதவானிடம் தெரிவித்தனர்.

-Thinakaran-

LEAVE A REPLY