யக்கலமுல்ல – அகுரஸ்ஸை வீதியில் விபத்து; அக்காவும் தம்பியும் மரணம்

0
209

மோட்டார் சைக்கிளுடன், பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும், அவரது தம்பியும் மரணமடைந்துள்ளனர்.

இன்று (13) காலை யக்கலமுல்ல – அகுரஸ்ஸை வீதியில், வந்துரம்முல்ல பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான, ஊழியர்கள் பயணித்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற நதீஷா தில்ருக்‌ஷி (29) அவரது தம்பி சுரேஷ் மதுசங்க (24) ஆகியோர் அதிக காயங்களுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மரணமடைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பஸ்ஸின் சாரதியான 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY