இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு

0
247

இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் அமைப்பின் வளாகத்தில் இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள் எம்.எல்.முஸ்னீ, யூ.எல்.எம்.ஜிப்ரி, இறக்காமம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.கே.ஏ.ரவூப், இறக்காமம் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.சபீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஏ.றியாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், பள்ளிவால் நிர்வாகம், இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்ப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கான ஒரு தொகுதி கதிரைகளை சங்க தலைவி சுல்பீக்காவிடம் கையளித்தார்.

-எம்.எம்.ஜபீர்-

LEAVE A REPLY