நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் “MyShake” Application

0
208

அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிலநடுக்கத்தை கண்டறியும் அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளனர். “MyShake” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பிளிகேஷன், நிலநடுக்கத்தினை crowdsourcing phones மூலம் முன்கூட்டியே கணித்துவிடுகிறது.

அதாவது, ஒரு இடத்தில் நிலநடுக்கம் நிகழப்போகிறது என்றால், அந்த இடம் மற்றும் நேரம் அதுமட்டுமின்றி அதன் அதிர்வீச்சு போன்றவற்றை துல்லியமாக ஸ்கேன் செய்து உடனடியாக அது சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கிறது.

60 சதவீதம் வரையிலான ஆண்ராய்டு ஸ்மார்ட்கைப்பேசிகள் சுமார் 6 மைல்(, (10 கிலோ மீற்றர்) வரையிலான தூரத்தில் நிகழும் நிலநடுக்கத்தை தரவு(Data) அடிப்படையில், மிகத்துல்லியமாக கணிக்கும் என உறுதியாக கூற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, மக்கள் அந்த அப்பிளிகேஷனை தரவிறக்கம் செய்து அதனை பயன்படுத்துவதற்கு முன்பாக, அது பற்றிய தகவல்களை முழுமையாக தரிந்துகொள்ள வேண்டும்.

கலிபோர்னியாவில் 16 மில்லியன் ஸ்மார்ட்கைப்பேசி மற்றும் உலக அளவில் 1 பில்லியன் ஸ்மார்ட்போன்களில் இந்த அப்பிளிகேஷன் பொருத்தப்படுவதற்கு மதிப்பிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY