காதலர் தினத்தை கண்டித்து காத்தான்குடி எங்கும் சுவரொட்டிகள்.

0
185

பெப்ரவரி 14 காதலர் தினத்தை கண்டித்து முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் “எச்சரிக்கை” என்று தலைப்பு இடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் வகுப்புகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு “எச்சரிக்கை” எனும் பிரசுரமும் வழங்கப்பட்டது.

கேடுகெட்ட காதல் கலாச்சாரத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. அந்நிய கேடுகெட்ட காதல் கலாச்சாரத்தை கண்டிப்போம்..

காதலின் பெயரால் கற்பை சூறையாட ஒரு தினம் தேவையா? புறக்கணிப்போம் இந்த கலாச்சார சீரழிவை !!!!

என்ற பல வசனங்கள் தாங்கியதாக இந்த சுவரோட்டிகளும் பிரசுரங்களும் காணப்பட்டன.

ஜுனைட்.எம்.பஹ்த்

e069d777-f808-4dfa-bbb1-9ee7483904ee

 

LEAVE A REPLY