ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

0
184

ஏறாவூர் நகரில் தம் வசம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் (11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று பொது மக்களிடம் இருந்து கிடைத்த துப்புத் தகவலின்படி இந்த இளைஞர் 360 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளைத் தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் பெண் சந்தை வீதியில் வைத்து 360 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அப்துல் கபூர் முஹம்மத் அம்ஜத் என்ற 19 வயதான இளைஞனை பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதி மன்றத்தில் நிறுத்தியபொழது எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY