இலங்கையை பந்தாடிய இந்தியா – 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

0
188

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது.

இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் ஜார்க்கண்டின் ராஞ்சியில் நேற்றைய தினம் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 43 ஓட்டங்களும், ஷிகர் தவான் அரைசதம் கடந்து 51 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய அஜின்கியா ரஹானே 25 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 30 ஓட்டங்களும், ஹர்தீக் பாண்டியா 27 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் திஸ்ஸர பெரரா 3 விக்கெட்டும், துஷ்மந்த சமீரா 2 விக்கெட்டும், சசித்திர சேனநாயக்க 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 197 ஓட்டங்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளும், ஆஷிஸ் நெஹ்ரா, ஜடேஜா, ஜஷ்பிரிட் பூமரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY