கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணம்: இறுதி சுற்றுப் போட்டி

0
174

“உடல் உள ஆரோக்கியம் வாழ்நாளை அதிகரிக்கும்” எனும் தொனிப்பொருளில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணம்” இறுதி சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலகங்களில் இருந்து பத்து பிரதேச செயலகங்களும் மாவட்ட செயலகம் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை போக்குவரத்து சாலை, வாழைச்சேனை மக்கள் வங்கி என்பன பங்குபற்றின.

பத்து ஓவர்களைக் கொண்ட இச் சுற்றுப் போட்டி கடந்த 04.02.2016ம் திகதி ஆரம்பமான இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (12.02.2016) வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக பொது மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதிப் போட்டிக்கு களுவான்சிக்குடி பிரதேச செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் தெரிவாகி முதலில் துடுப்பெடுத்தாடிய களுவான்சிக்குடி பிரதேச செயலக அணி ஐந்து விக்கட்டுக்களை இழந்து எழுப்பத்தொரு (71) ஓட்டங்களைப் பெற்றது இதனை எதிர்த்தாடிய மாவட்ட செயலக அணி 9.2 ஓவர்களில் எழுபத்திரெண்டு (72) ஓட்டங்களைப்பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இறுதி நிகழ்வின் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கோறளைப்பற்று வேல்விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் ரணில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பதக்கங்களையும் வழங்கி வைத்தனர்.

வாழைச்சேனை நிருபர்

0dac2900-03f5-444e-be82-0d89185c4827 1f42d74a-ad05-48f2-9f0f-cef2e6203d7a 6a20e5ea-fd44-47af-a7b9-e779e0323f89 8d9d14f4-8405-44e1-8e45-0d33ab89bfc4 9f6729b2-1edd-4949-a93e-c3d44f083117 300fdead-64ed-4e31-b5cc-c6d699651d90 381a12b8-51a5-435f-bc6d-a28c9d155c55 6912b30d-90b0-49e1-8ddd-7c124017ab97 7994be3e-3ad7-45be-852a-d38ad6556a86 9514ef34-49f4-4540-bd44-7ce69cbc0ffa b82e3dc9-25f0-405a-a4e9-d30b62f92e5a baeb6204-139d-4b02-bd22-1529ec6c00f3 f487ce9d-9089-4977-be6d-971613963516 fc626614-dafc-4a9a-9f23-4869bbf719b8

LEAVE A REPLY