அடையாள அட்டை இல்லாத நிலையில் 2 லட்சம் பேர்; மூன்று மாதத்துக்குள் இலத்திரனியல் அட்டைகள்

0
201

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 2 இலட்சம் பேர் உள்ளனர். அடையாள அட்டை உள்ளோருக்கும், இல்லாதோருக்கும் மூன்று மாத காலத்தில் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்க இருப்பதாக உள்ளக அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.

புதிய செயற்றிட்டத்திற்கு 8 பில்லியன் ரூபா செலவிடப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். வாய்மூல விடைக்காக புத்திக பத்திரன எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் குறித்து சரியான தகவல் கிடையாது.

அடையாள அட்டைபெற விரும்பாதோர், வெளிநாட்டில் பிறந்தோர் பிறப்புச் சான்றிதழ் விபரமற்றோர் என பலர் இருக்கிறார்கள். இதில் பிறப்புச் சான்றிதழ் விபரமற்றவர்களுக்கு மாற்று வழியினூடாக அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.

(Thinakaran)

LEAVE A REPLY